Friday 27 March 2015

தனித்தீவாக .....

பதின்பருவங்களில்
எவ்வளவு முயன்றாலும்
குழந்தைகள் தனித்தீவாக
மாறுதலை தவிர்க்க முடிவதில்லை...

கையில் மணலை அள்ளும்போது
அது விரல் இடுக்கில் சரசரவென
இறங்கும் அவசரம் போல
ஒரு அலாதியான வேகம்....

கனவு நுரைக்கும் கண்கள்
வளர வளர என்னை
பற்றிக் கொள்ளாத சுதந்திரம் ....
அனாயாசமாய் சுழலும் பேச்சு...

என்ன தேடுகிறேன்?
என்ன கண்டுகொண்டார்கள்?
என்னவாயினும் அதிகம்
நேசிக்கப்படுவதும் நான்தானே ....

4 comments:

  1. நேசங்கள் தொடரட்டும்...

    ஒவ்வொரு பதிவிற்கும் தலைப்பை வைக்கவும்... (and Labels) முதல் பதிவின் கீழே "edit" என்பதை சொடுக்கி, தலைப்பு எங்கு இட வேண்டும் என்பதையும் பார்க்கவும்...

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க

    ReplyDelete
  3. நல்லா இருக்குங்க

    ReplyDelete